வணிகம்

காபி டே நிறுவனத்தின் கடன்களை அடைப்பதற்காக பெங்களூரில் உள்ள ஐடி பார்க் விற்பனை: இயக்குநர்கள் குழு முடிவு

செய்திப்பிரிவு

பெங்களூரு

காபி டே நிறுவனத்தின் கடன்களை அடைப்பதற்காக, அந்நிறுவனத் துக்கு சொந்தமான பெங்களூரில் உள்ள தொழில்நுட்ப பூங்கா ஒன்று விற்கப்பட உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்நிறுவ னத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

காபி டே நிறுவனர் சித்தார்த்தா கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து தற்காலிக தலைவராக எஸ்வி ரங்கநாத் நியமிக்கப்பட்டார். நிறுவ னத்தின் அடுத்தகட்ட முடிவுகளை எடுப்பதற்காக ஆக. 8 தேதி இயக்கு நர்கள் குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டு இருந்தது.

முடிந்த மார்ச் நிதி ஆண்டின்படி, காபி நிறுவனத்துக்கு ரூ.7,600 கோடி அளவில் கடன் உள்ளது. இவற்றை அடைப்பதற்காக, அந் நிறுவனம் தொடர்புடைய சொத்து கள் விற்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலை யில், நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில், பெங்களூரில் உள்ள 90 ஏக்கர் பரப்பளவு கொண்ட தொழில்நுட்ப பூங்காவை விற்பதற் கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐடி பூங்காவை அமெரிக் காவைச் சார்ந்த ப்ளாக்ஸ்டோன் என்ற நிறுவனம் வாங்க உள்ள தாக தெரிகிறது. மேலும் இந்த கூட்டத்தில், சித்தார்த்தா விட்டுச் சென்ற கடித்தில் உள்ள தகவல் களை ஆராய வெளி நிறுவனம் ஒன்றை இயக்குநர்கள் குழு நியமித்து உள்ளது.

காபி டே நிறுவனத்தின் முதல் காலாண்டு நிதி அறிக்கை இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நிதி அறிக்கை அறிவிப்பு வெளியாக இன்னும் சில நாட்கள் ஆகும் என்று கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT