வணிகம்

மத்திய அரசின் மின்சார வாகன திட்டம், வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்பு: நிதி ஆயோக் துணை தலைவர் கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி

மின்சார வாகனத் தயாரிப்பு தொடர் பான மத்திய அரசின் அறிவிப்பு வாகனத் தயாரிப்பு நிறுவனங் களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். மாறாக, வாகன தயாரிப்பு நிறு வனங்கள் அவற்றை அச்சத்துடன் பார்க்க வேண்டாம் என்று நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறியுள்ளார்.

2025 மார்ச் 31-க்கு பிறகு விற்கப் படும் 150 சிசி-க்கு குறைவான இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் மின்சார வாகனமாக இருக்க வேண் டும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதேபோல், 2030-க்கு பிறகு விற்கப்படும் அனைத்து வாகனங்களும் மின்சாரத்தில் இயங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று கூறியது.

இந்நிலையில் நான்கு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் அரசின் மின்சார வாகனம் தொடர் பான அறிவிப்பால் தங்கள் விற் பனை பாதிக்கப்படும் என்று கூறிவருகின்றன.

இது குறித்து நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறியபோது, ‘மின்சார வாகனத் திட்ட அறிவிப்பில் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் சேர்க்கப் படவில்லை. குறிப்பாக பெட்ரோல், டீசலில் இயங்கும் இரு சக்கர வாகனங்களுக்கு பதிலாக பேட் டரியில் இயங்கும் இருசக்க வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றே கூறப்பட்டு இருக்கிறது. இதில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அச்சப் பட என்ன இருக்கிறது?’ என்றார்.

வாகனத் தயாரிப்பு நிறுவனங் கள் தற்போது பிஎஸ் 4 உள்ள தயாரிப்பு விதிமுறைகளை பின்பற்றி வருகின்றன. இந் நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 2020 முதல் பிஎஸ் 6 தயாரிப்பு விதிமுறைகளை வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பின் பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. அதைத் தொடர்ந்து அதற்கான தொழில் நுட்பத்தில் பல்வேறு வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்நிலையில் மத் திய அரசின் மின்சார வாகன அறிவிப்பால் வாகன விற்பனை பாதிப்படையும் என்று வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் கூறு கின்றன.

இதுகுறித்து ராஜிவ் குமார் கூறியபோது, ‘மத்திய அரசு 2025-க் குள் 150 சிசிக்கு குறைவாக உள்ள இருசக்கர வாகனங்கள் அனைத்தும் மின்சாரத்தில் இயங் கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளதே தவிர, 150 சிசிக்கு மேலுள்ள இருசக்கர வாகனங்களும் மின்சார வாகன மாக இருக்க வேண்டும் என்று கூற வில்லை. எனவே வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பயம் அர்த்த மற்றது. மட்டுமல்லாமல், இருசக்கர வாகனத்தை பொருத்தவரை பிஎஸ் 6 தொழில் நுட்பத்துக்கு மாறுவது செலவுமிக்கதும் அல்ல. பிஎஸ் 6 தொழில் நுட்பத்துக்காக அவர்கள் செய்யும் முதலீடுகளை அடுத்த ஆறு ஆண்டுகளில் அவர்கள் பெற்றுவிடுவார்கள் என்று கூறினார்.

SCROLL FOR NEXT