வணிகம்

இந்தியா சிமென்ட்ஸ் லாபம் ரூ. 64 கோடி

செய்திப்பிரிவு

சென்னை

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியா சிமென்ட்ஸ் ஜூன் மாதத்துடன் முடி வடைந்த முதல் காலாண்டில் ரூ. 64.27 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறு வனம் ஈட்டிய லாபம் ரூ. 2.65 கோடி யாக இருந்தது. மார்ச் மாதத்துடன் முடி வடைந்த நிதி ஆண்டில் நிறுவனத் தின் நிகர லாபம் ரூ. 19.10 கோடியாகும்.

நடப்பு நிதி ஆண்டில் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 1,503.61 கோடி. சென்ற ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ.1,393.76 கோடியாக இருந்தது. பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் இந்நிறுவன பங்கு 4.85 சதவீதம் அதிகரித்து ரூ.89.65 என்ற விலையில் வர்த்தகமானது.

SCROLL FOR NEXT