வணிகம்

ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்த பிறகும் பங்குச் சந்தையில் தொடர்ந்து சரிவு

செய்திப்பிரிவு

மும்பை

ரிசர்வ் வங்கி வட்டிக் குறைப்பு நடவடிக்கையை எடுத்தாலும் அது பங்குச் சந்தையை ஊக் குவிப்பதாக அமையவில்லை. நேற்று ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கை முடிவை வெளியிட் டது. அதில் ரெப்போ வட்டி விகிதம் 35 புள்ளிகள் குறைக்கப்பட் டது. ஆனாலும் அது பங்குச் சந்தை புள்ளிகள் உயர போது மானதாக அமையவில்லை.

காலையில் ரிசர்வ் வங்கி வட் டிக் குறைப்பு அறிவித்த உட னேயே மும்பை பங்குச் சந்தை யில் 120 புள்ளிகள் வரை உயர்ந் தது. ஆனால் அது மாலை வரை நீடிக்கவில்லை. வர்த்த கம் முடிவில் மும்பை பங்குச் சந்தையில் 286 புள்ளிகள் சரிந்து 36,610 புள்ளிகளில் நிலை கொண்டது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 92 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 10,885 புள்ளிகளானது.

பஞ்சாப் நேஷனல் வங்கி 2.35%, பாங்க் ஆஃப் பரோடா 1.15%, ஆக்சிஸ் வங்கி 0.88%, எஸ்பிஐ 0.73% உள்ளிட்ட வங்கிப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. இதேபோல ஆட்டோ மொபைல் துறையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 2.02%, ஐஷர் மோட்டார்ஸ் 1.47%, பாஷ் 1.08% வரை சரிந்தன. ரியல் எஸ்டேட் பிரிவில் இண் டியா புல்ஸ் 10.21%, சன்டெக் ரியால்டி 1.08%, ஒபராய் ரியால்டி 0.25% வரை சரிந்தன.

டாடா ஸ்டீல், வேதாந்தா, ஐடிசி, ரிலையன்ஸ், மாருதி, எல்அண்ட்டி, ஹெச்டிஎஃப்சி, கோடக் வங்கி ஆகியவற்றின் பங்குகள் 5 சதவீத அளவுக்கு சரிந்தன.

அதேசமயம் ஹெச்யுஎல், யெஸ் வங்கி, ஹீரோ மோட் டோகார்ப், இண்டஸ் இந்த் வங்கி, சன் பார்மா, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் 2 சதவீத அளவுக்கு உயர்ந்தன.

SCROLL FOR NEXT