வணிகம்

2025–க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்; பிரதமரின் இலக்கை அடைய ஆண்டுக்கு 9% வளர்ச்சி தேவை: சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனம் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

இந்தியா 2025 ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்றால், இந்தியா வின் வளர்ச்சி ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்க வேண் டும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான எர்னஸ்ட் அண்ட் யங் தெரிவித்துள்ளது.

2025-க்குள் 5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை எட்டு வதே இந்தியாவின் முதன்மை இலக்கு என்று பிரதமர் மோடி அறி வித்து இருந்தார். இந்த இலக்கை எட்டும் நோக்கில் நடப்பு நிதி ஆண் டுக்கான பட்ஜெட்டும் வகுக்கப்பட் டது. இந்நிலையில் 2025 க்குள் 5 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைய வேண்டு மென் றால் இந்தியாவின் வளர்ச்சிவிகிதம் ஆண்டுக்கு 9 சதவீதமாக அதி கரிக்க வேண்டும் என்று எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முடிவில் (31 மார்ச் 2020) இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று கருதப்படும்பட்சத்தில், இந்தியா வின் பொருளாதாரம் 2.7 டிரில்லி யன் டாலரில் இருந்து 3 டிரில்லி யன் டாலராக உயரும். எனில் 2025 ம் ஆண்டில் இந்தியா 5 டிரில் லியன் பொருளாதாரத்தை அடைய வேண்டுமென்றால் ஒவ்வொரு ஆண்டும் இந்த வளர்ச்சி 9 சதவீத மாக அதிகரிக்க வேண்டும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இந்தியாவின் வளர்ச்சி ஆண்டுக்கு 9 சதவீதம் உயரும்பட் சத்தில், 2020-21-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 3.3 டிரில்லியன் டாலராகவும், 2021-22 ம் நிதி ஆண்டில் 3.6 டிரில்லி யன் டாலராகவும், 2022-23 ம் நிதி ஆண்டில் 4.1 டிரில்லியன் டாலராக வும், 2023-24 ம் நிதி ஆண்டில் 4.5 டிரில்லியன் டாலராகவும் உயர்ந்து 2024-2025 ம் நிதி ஆண்டில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும்.

அதேபோல், முதலீடுகளின் விகிதமும் அதிகரிக்க வேண்டும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள் ளது. மத்திய மாநில அரசுகளின் முதலீடுகள், தனியார் நிறுவனங் களின் முதலீடுகள் அதிகரிக்க வேண் டும். கடந்த நிதி ஆண்டில் முதலீடுகளின் வளர்ச்சி விகிதம் 31.3 சதவீதமாக இருந்தது. 2020-21 ம் ஆண்டில் அது 38 சதவீதமாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஆண்டுக்கு 9 சதவீத வளர்ச்சி சாத்தியப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பணவீக்கம் 4 சதவீதமாக இருக்கும்பட்சத்தில் 2025 க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளா தாரத்தை எட்ட ஆண்டுக்கு 9 சதவீத வளர்ச்சி தேவை. பணவீக்க அளவு 4 சதவீதத்துக்கு கீழே குறையும்பட்சத்தில், 2025-க்குள் இந்த இலக்கை அடைய முடியாது. இதை அடைய மேலும் சில ஆண்டுகள் தாமதம் ஆகும் என்று அந்நிறுவனம் தெரிவித் துள்ளது. ஆனால், கடந்த நிதி ஆண்டில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 5-ம் இடத்திலிருந்து 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT