புதுடெல்லி
ரான்பாக்ஸி நிறுவன முன்னாள் தலைவர்கள் மல்விந்தர் சிங் மற்றும் ஷிவிந்தர் சிங் ஆகிய இரு வருடைய வீடுகள் மற்றும் சொந்த மான இடங்களில் அமலாக்கத் துறை நேற்று சோதனை நடத்தி யது.
ரூ.740 கோடி அளவில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக இவர்கள் மீது ரெலிகேர் நிறுவனம் குற்றம் சுமத்தியது. அந்த வழக்கைத் தொடர்ந்து இந்த சோதனை மேற் கொள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரெலிகேர் நிறுவனம் சிங் சகோதரர்கள் மீது டெல்லி காவல் நிலையத்தில் பொருளாதார குற்றத் தின் கீழ் புகார் அளித்தது. அந்தப் புகாரைத் தொடர்ந்து இவர்கள் மீது கடந்த மே மாதம் நிதி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்த நிலையில், இவர் களுக்கு சொந்தமான ரான்பாக்ஸி நிறுவனத்தை, 2008 ம் ஆண்டு ஜப்பானை தலைமையிட மாகக் கொண்ட மருந்து பொருட் கள் தயாரிப்பு நிறுவனமான டைச்சி சன்ங்யோ நிறுவனத் துக்கு விற்றனர். ஆனால் அந் நிறுவனத்தின் மீது இருந்த பல் வேறு வழக்குகளை முறையாக தெரிவிக்காமல் மறைத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து டைச்சி சன்ங்யோ நிறுவனம் அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் டைச்சி சன்ங்யோ நிறு வனத்துக்கு சிங் சகோதரர்கள் செலுத்த வேண்டிய கடன்களை முறையாக செலுத்தாவிட்டால் சிறை செல்ல நேரிடும் என்று எச்சரித்தது.
இவர்கள் மீது பல்வேறு புகார் கள் எழுந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் இவர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபோர்டிஸ் நிறு வனத்தின் இயக்குநர் குழு விலிருந்து பதவி விலகினர்.