எஸ்.வி.ரங்கநாத் 
வணிகம்

காபி டே நிறுவனத்தின் தற்காலிக தலைவராக எஸ்.வி.ரங்கநாத் நியமனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

காபி டே நிறுவனத்தின் நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், அந்நிறுவனத்தின் தற்காலிக தலை வராக எஸ்.வி.ரங்கநாத் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் ஏற் கெனவே அன்றாட அலுவல் பொறுப்புகள் ஏதும் இல்லாத இயக் குநராக செயல்பட்டு வந்தார். அதே போல், தற்காலிக தலைமை செயல் அதிகாரியாக நிதின் பக்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காபி டே நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவின் தலைவர் ஆவார்.

இதுகுறித்து காபி டே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யுள்ளதாவது: காபி டே நிறுவனத் தின் தற்காலிக தலைவராக எஸ்.வி ரங்கநாத்தும் மற்றும் தற்காலிக தலைமை செயல் அதிகாரி யாக நிதின் பக்மானும் நியமிக்கப் பட்டுள்ளார்கள். இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள், கடனாளர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் ஆகிய அனைவரின் நலன்களையும் பாதுகாப்பதில் இயக்குநர் குழு உறுதியோடு உள்ளது. சித்தார்த்தா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களை ஆராய்ந்து வருவதாகவும். அடுத்தகட்ட நடவடிக்கையை விரைவில் எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள் ளது.

நிறுவனத்தின் தணிக்கையாளர் கள் மற்றும் பிற ஆலோசகர்களுடன் நிர்வாக செயற்குழு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது என்று வாரியம் தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 8 தேதி இயக்குநர் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் நிறுவனம் சார்ந்த அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப் படும் என்று தெரிகிறது.

காபி டே நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த்தா தற்கொலை செய்வதற்கு முன்னால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் வரித்துறை அதிகாரிகளால் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப் பட்டதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் நிறுவனத்தின் இயக்குநர் கள் மற்றும் ஊழியர்களுக்கு தனது முடிவு குறித்த வருத்தத்தை தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT