வணிகம்

புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்த வால்வோ திட்டம்: நிர்வாக இயக்குநர் தகவல்

ஐஏஎன்எஸ்

சொகுசு கார்கள் தயாரிப்பில் முன் னணியில் விளங்கும் ஸ்வீடனைச் சேர்ந்த வால்வோ நிறுவனம் இந்தியாவில் புதிய ரக கார்களை தொடர்ந்து அறிமுகப்படுத்த உள் ளது. சென்னையில் நிறுவனத்தின் புதிய ரகக் காரான எஸ் 60-ஐ அறி முகப்படுத்தியபோது நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாம் வான் பான்ஸ்டார்ப் தெரிவித்தார்.

இந்தியாவின் கார் சந்தையில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 சதவீத சந்தையைப் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், இதை எட்டுவதற்காக புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அடுத்து வரும் ஆண்டுகளில் 5 புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், ஏற்கெனவே உள்ள மாடல்களில் மேம்படுத்தப்பட்ட ரகங்களை அறி முகம் செய்ய முடிவு செய்துள்ள தாகவும் அவர் கூறினார்.

நேற்று அறிமுகம் செய்யப்பட்ட புதிய ரக எஸ் 60 டி 6 பெட்ரோலில் ஓடும் காரின் விற்பனையக விலை ரூ. 42 லட்சமாகும்.

கடந்த ஆண்டு இந்நிறுவனம் 1,200 கார்களை விற்பனை செய் துள்ளது. இந்த ஆண்டில் இதைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையி லான கார்களை விற்பனை செய்ய முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். கடந்த ஆண்டு நிறுவனத்தின் கார் சந்தை 3.5 சத வீதமாக இருந்ததாகவும் இதை 10 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறி னார். இந்த இலக்கை அடுத்த 5 ஆண்டுகளில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமீப காலமாக வால்வோ நிறு வனம் எக்ஸ்சி 90, வி40 ரக கார்களை அறிமுகப்படுத்தியது. இப்போது எஸ் 60 ரகக் காரை அறிமுகம் செய்துள்ளது. மேலும் 5 புதிய விநியோகஸ்தர்களை நியமிக்க உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இப்போது அசெம்பிள் செய்யப்படும் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போதைக்கு இந்தியாவில் உற்பத்தி ஆலை தொடங்கும் எண்ணம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT