கோப்புப் படம் 
வணிகம்

செய்தித்தாள் இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு ஐஎன்எஸ் கோரிக்கை

செய்திப்பிரிவு

செய்தித்தாள் இறக்குமதி வரியை திரும்பப் பெறக்கோரி இந்திய செய்தித்தாள் சங்கம் (ஐஎன்எஸ்) மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் செய்தித்தாள் அச்சிடு வதற்காக இறக்குமதி செய்யப் படும் காகிதங்களுக்கு 10 சத வீத வரி விதிக்கப்பட்டது. இந் நிலையில், இந்த அதீத வரி விதிப்பு காரணமாக பத்திரிகைத் துறை கடுமையான அளவில் பாதிப்பை சந்திக்கும் என்று கூறி விதிக்கப்பட்ட வரியை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று ஐஎன்எஸ் சார்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளி யிட்ட அறிக்கையில், ஆண்டுக்கு 25 லட்சம் டன் அளவில் காகிதங்கள் செய்திகள் அச்சிடுவதற்கு பயன் படுத்தப்படுகிறது. இதில் உள்நாட்டு காகித ஆலைகள் 10 லட்சம் டன் அளவே உற்பத்தி செய்வதற்கான திறனை கொண்டுள்ளன. ஆனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள், செய்தித்தாள்களுக்கு தேவையான காகித வசதி உள்நாட்டிலே இருப் பதாக தவறான விவரங்களை அளித்துள்ளதாக தெரிகிறது. உண்மையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காகிதங்களைக் கொண்டு அனைத்து செய்தித் துறை தேவைகளையும் நிறைவேற்ற முடியாது. மேலும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காகிதங் களின் தரம் மிக மோசமாக உள்ளது. இதனால் அவற்றை பயன்படுத்துவது அதிக இழப்பை தருகிறது. ஏற்கெனவே பல்வேறு காரணங்களால் பத்திரிகைத் துறை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், இந்த அதீத வரி விதிப்பு ஒட்டுமொத்தமாக பத் திரிகைத் துறையை இழுத்து மூடச் செய்யக் கூடியதாகவே அமையும். எனவே, அரசு விதிக் கப்பட்ட வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT