வணிகம்

அலுமினியம் மீதான சுங்க வரியை உயர்த்த வலியுறுத்தல்

பிடிஐ

உள்ளூர் அலுமினிய தொழில் நிறு வனங்களைக் காக்க அலுமினியம் மீதான சுங்க வரியை உயர்த்த வேண்டும் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் அரசை வலியுறுத்தி யுள்ளனர்.

2010-11-ம் நிதி ஆண்டில் 8.81 லட்சம் டன்னாக இருந்த அலுமினிய இறக்குமதி 2014-15-ம் நிதி ஆண் டில் 15.63 லட்சம் டன்னாக அதிகரித் துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சீனாவிலிருந்து அதிக அளவில் அலுமினியம் இறக்குமதி செய்யப்படுவதாக இந்திய அலுமினிய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்நிய இறக்குமதியால் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ள தால் உள்ளூர் நிறுவனங்களால் வளர்ச்சி இலக்கை நிர்ணயிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பால்கோ நிறுவனத்தின் துணைத் தலைவர் பி.கே. வாஸ்தவ் தெரிவித்துள்ளார்.

லண்டன் உலோக சந்தையில் அலுமினியத்தின் விலை ஒரு டன் 1,685 டாலராக சரிந்துள்ளது. இது சர்வதேச அளவில் அலுமினிய சந்தையைப் பாதித்துள்ளது.

ஒரு டன் அலுமினிய உற்பத்திச் செலவு 1,900 டாலராக உள்ளது. ஒரு டன் உற்பத்திக்கு சராசரியாக 200 டாலர் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இறக்குமதி அதிகரிப்பதாலும், உள்நாட்டில் அலுமினிய தேவை குறைவதாலும் அலுமினிய உற்பத்தி யாளர்கள் கடும் நெருக்கடியை சந் தித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் வெளிநாடுகளிலிருந்து அலுமினிய தூள் (ஸ்கிராப்) இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு சுங்க வரி 2.5 சதவீதம்தான். அதேசமயம் கட்டியாக அலுமினியம் இறக்குமதி செய்தால் அதற்கு சுங்க வரி 5 சதவீதமாகும். பிற உலோகங்களான தாமிரம், ஈயம், நிக்கல், துத்தநாகம் ஆகியவற்றைப் பொறுத்தமட்டில் கட்டியாக இறக்குமதி செய்தாலும், தூளாக இறக்குதி செய்தாலும் ஒரே சீரான இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. ஆனால் அலுமினியத்தை தூளாக இறக்குமதி செய்யும்போது சுங்கவரி பாதியாகக் குறைக்கப் பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டில் அலுமினிய தொழி லைக் காப்பாற்ற வேண்டுமெனில் இறக்குமதி செய்யப்படும் அலுமினிய கட்டிகள் மற்றும் துகள்களுக்கு ஒரே சீராக 10 சதவீத சுங்க வரி விதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT