விற்பனை அடிப்படையில் இந்தியாவின் நான்காவது பெரிய பார்மா நிறுவனமான லுபின், அமெரிக்கா பார்மா நிறுவனமாக காவிஸ் (Gavis) நிறுவனத்தை வாங்கியது. 88 கோடி டாலர் (ரூ.5,610 கோடி) கொடுத்து இந்த நிறுவனத்தை லுபின் வாங்குகிறது.
அமெரிக்க சந்தையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த நிறுவனத்தை வாங்கி இருக்கிறது.
சர்வதேச அளவில் நிறுவனங் களை வாங்குவதில் லுபின் கவனம் செலுத்துகிறது. இந்த மாத ஆரம்பத்தில் ரஷ்யாவை சேர்ந்த பயோகாம் நிறுவனத்தை வாங்கியது. அதற்கு முன்பு மெக்ஸிகோவில் உள்ள மருந்து நிறுவனத்தை வாங்கியது.
நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 16% சரிந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 624 கோடி ரூபாயாக இருந்த நிகரலாபம் இப்போது 525 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது. வர்த்தகத்தின் முடிவில் 5.25 சதவீதம் சரிந்து 1,728 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.