வணிகம்

கேவிபி லாபம் 59% உயர்வு

செய்திப்பிரிவு

கரூர்

கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம் இந்த நிதி ஆண்டின் முதல் காலாண் டில் 59 சதவீதம் உயர்ந்துள்ளது.

வங்கியின் நிர்வாக இயக்குநர் பி.ஆர்.சேஷாத்ரி நிறுவனத் தின் காலாண்டு நிதி நிலை அறிக் கையை நேற்று வெளியிட்டார். ஜூன் 30, 2019 நிலவரப்படி வங்கி யின் வர்த்தகம் முந்தைய ஆண் டைக் காட்டிலும் 5.17 சதவீதம் உயர்ந்து ரூ.1,10,893 கோடியாக உள்ளது. வங்கியின் மொத்த வட்டி வருமானம் ரூ.584 கோடி யாக உள்ளது.

வங்கியின் நிகர லாபம் முந்தைய நிதி ஆண்டின் முதல் காலாண்டைக் காட்டிலும் 58.8 சதவீதம் உயர்ந்து ரூ.72.9 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.46 கோடியாக இருந்தது என்று அவர் கூறினார்.

குறிப்பாக வங்கியின் நிகர வாராக்கடன் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது என்றார். ரூ.2,420 கோடியிலிருந்து ரூ.2,322 கோடியாக நிகர வாராக்கடன் குறைந்துள்ளது.

கரூர் வைஸ்யா வங்கிக்கு ஜூன் மாத நிலவரப்படி 778 கிளைகள் மற்றும் 2,177 ஏடிஎம்கள் செயல்படுவதாக அவர் கூறினார்.

SCROLL FOR NEXT