புதுடெல்லி
வரி ஏய்ப்பு செய்பவர்களிடம் வரித் துறை அதிகாரிகள் தயவு தாட்சண் யம் பார்க்காமல் சட்டப்படி நடவடிக் கைகளை எடுக்கலாம். அதே சமயம் நேர்மையாக வரி செலுத்தும் எண் ணத்துடன் இருப்போருக்கு ஒருங் கிணைப்பாளராக உதவ வேண் டும் என்று நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டார்.
வருமான வரி தின விழாவில் கலந்துகொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்து வது என்பது நாட்டின் நலனுக்காக வும் முன்னேற்றத்துக்காகவும் செலுத்தும் பங்களிப்பு. எனவே வரி செலுத்துவதை தண்டனையாகக் கருத வேண்டாம் என்று பேசினார்.
மேலும் அவர் கூறியதாவது, வரி ஏய்ப்பு செய்பவர்கள் கண்காணிப் பில் கொண்டுவரப்பட வேண்டும். எனவே வருவாய்த் துறையின் விசா ரணை அமைப்புகள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். வருமான வரி தரவு களை வைத்து வரி ஏய்ப்பு செய்பவர் களை அடையாளம் காண வேண் டும் என்று வரித் துறை அதிகாரி களிடம் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் நலனில் விளையாடு பவர்களுக்கு தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டியதில்லை. எனவே வரி ஏய்ப்பு செய்பவர்களிடம் சட்டப் படியான நடவடிக்கைகளைத் துணிந்து எடுக்கலாம். உங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவை யும் தரத் தயாராக இருக்கிறோம். அதேசமயம் நேர்மையாக வரிச் செலுத்தும் எண்ணமிருப்போருக் குத் தேவையான வசதிகளை ஏற் படுத்திக்கொடுக்கும் ஒருங்கிணைப் பாளராக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
டேட்டா மைனிங், பிக் டேட்டா என அனைத்துவிதமான தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, வருவாய் துறை ஆகிய மூன்று துறைகளின் விசாரணை பிரிவுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தற்போதுள்ள 8 கோடி என்ற நிலையிலிருந்து வரி செலுத்துவோர் எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டும்.
இந்த நிதி ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் இலக்கு ரூ.13.35 லட்சம் கோடியாக பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு எளிதில் அடையக்கூடிய இலக்குதான். எனவே தொழில்நுட்ப வசதிகள், தரவுகள், அதிகாரிகள், அனைத்தும் ஒருங்கிணைந்து சரியாகப் பயன்படுத்தப்பட்டால் வரி ஏய்ப்புக்கு வாய்ப்பே இருக்காது.
நாட்டின் மேம்பாட்டுக்கும், மக்களின் மேம்பாட்டுக்கும் வரி என் பது அத்தியாவசியமானது. இதை உணர்ந்து வரி செலுத்துவோர் தங் கள் பங்களிப்பை செலுத்த வேண் டும். வரி வருவாய் இல்லாமல், மக் களுக்குத் தேவையான எதையும் அரசால் பகிர்ந்தளிக்க முடி யாது.
அதிகமாக வருமானம் ஈட்டு வோரிடம் அதிக வரி வாங்குவது, வருமானம் ஈட்ட முடியாமல் இருப் பவர்களுக்கு அடிப்படை வாழ் வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகத்தானே தவிர, தண்டனை அல்ல என்பதை உணர வேண்டும். அரசுக்கு வரிப் பணம் தேவை. அதில் உங்களுடைய பங் களிப்பை நீங்கள் தர தயாரா என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார்.