புதுடெல்லி:
2018-19 வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி வரை இறுதிக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரி வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக ஜூலை 31 என்று இருந்தது.
இந்த இறுதிக் கெடு, தனிநபர்கள், தனிநபர்கள் அமைப்பு, இந்து கூட்டுக்குடும்பம், நபர்கள் கூட்டமைப்பு ஆகியோருக்கு இந்த இறுதிக் கெடு பொருந்தும்.
ஜூலை 31ம் தேதி இறுதிக் கெடு நெருங்கும் வேளையில் தனிநபர் வரிசெலுத்துவோர் சமூகவலைத்தளங்களிலும் பிற ஊடகங்கள் வாயிலாகவும் இறுதிக் கெடுவை நீட்டிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
அதாவது ஜூலை 31ம் தேதி வருமானவரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய போதிய ஆவணங்களை தாங்கள் இன்னும் பெறவில்லை என்று இவர்கள் நீட்டிப்புக் கோரிக்கையை வைத்தனர், அதற்கு இசைந்து மத்திய நேரடி வரி வாரியம் ஏற்றுக் கொண்டு கடைசி தேதியை ஆகஸ்ட் 31ம் தேதிவரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.