வணிகம்

அரசு, ஒழுங்குமுறை அமைப்பின் ஆதரவு கோரும் பேமென்ட் வங்கிகள்

செய்திப்பிரிவு

மும்பை

பேமென்ட் வங்கிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இவை தொடர்ந்து நடைபெற வேண்டு மானால் அரசு மற்றும் ஒழுங்கு முறை ஆணையங்களின் ஆதரவு அவசியம் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.

சமீபத்தில் பிர்லா குழுமம் தனது பேமென்ட் வங்கி செயல்பாடுகளை மூடப் போவதாக அறிவித்து அதற் கான நடவடிக்கைகளை தொடங்கி யுள்ளது. ஏற்கெனவே வோடபோன்-எம்-பெசா பேமென்ட் வங்கி சேவையும் நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்நிலையில் அரசின் ஆதரவு பேமென்ட் வங்கிகளுக்கு அவசியம் என்ற குரல் வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

பேமென்ட் வங்கிகளின் எதிர் காலம் கேள்விக்குறியாக உள்ளது. அவற்றின் விரிவாக்கம், வளர்ச்சி ஆகியன இப்போதைய கட்டுப்பாடு களில் சாத்தியமல்ல என்பது தெரிய வந்துள்ளது. எனவே அரசின் ஆதரவு, ஒழுங்குமுறை ஆணையங் களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே வளர்ச்சி காண முடியும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு பேமென்ட் வங்கி கள் தொடங்க 11 நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது. அதில் தற்போது 4 நிறுவனங்களின் பேமென்ட் வங்கிகள் மட்டுமே செயல்படுகின்றன.

பேமென்ட் வங்கிகளைப் பொருத்தமட்டில் மிகவும் கடுமை யான ஒழுங்குமுறை விதிகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக சொத்து மற்றும் கடன் பொறுப்புகள் விஷயத்தில் இவற் றுக்கு பெரும் நெருக்குதல் உள்ளா வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேமென்ட் வங்கிகளால் கடன் வழங்க முடியாது. இவை அதிகபட் சம் ரூ.1 லட்சம் வரைதான் சேமிப்பு களை பெறமுடியும். அதேசமயம் முதலீட்டு அளவானது 15 சதவீதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. கடன் வழங்க முடியாத சூழலில் முதலீட்டு அளவு அதிகமாக இருப்பது பேமென்ட் வங்கிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. தொழில்நுட்ப ரீதியில் மிகவும் வலுவாக உள்ள நிறுவனங்களால் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்ற அளவில் தற்போதைய நிலவரம் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற வங்கிகளிலிருந்து ரூ.1 லட்சத்துக்கும் மேலாக நிதியை டிரான்ஸ்பர் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. -பிடிஐ

SCROLL FOR NEXT