புதுடெல்லி
ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத் தின் நிதி மோசடி வழக்கில், அந்நிறுவனத்துக்கு தர மதிப்பீடு அளித்த ஐந்து தர மதிப்பீட்டு நிறுவனங்கள் மீதும் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) விசாரனை நடத்த உள்ளது.
கடந்த ஆண்டு ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனம் ரூ.90,000 கோடி அளவில் நிதி மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டறியப்பட்ட நிலை யில் அதன் மீதான விசாரணை தற் சமயம் நடந்து வருகிறது. இந்நிலை யில் ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறு வனத்துக்கு தர மதிப்பீடு அளித்த நிறுவனங்களின் அறிக்கையை மறுஆய்வு செய்வதற்கு கிராண்ட் தோர்ண்டன் தணிக்கை நிறுவனம் நியமிக்கப்பட்டது.
அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், தர மதிப்பீடு நிறுவனங் கள், ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறு வனம் பெரும் நிதிச் சிக்கலில் இருப்பது தெரிந்தும் அதிக மதிப்பீட்டை வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. கிரிஸில், கேர் ரேட்டிங், ஐசிஆர்ஏ, இந்தியா ரேட்டிங், பிரிக் ஒர்க் ஆகிய தர மதிப்பீட்டு நிறுவனங்கள் ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத்துக்கு தர மதிப்பீடு அளித்து வந்தன.
போலி அறிக்கை
2015-ம் ஆண்டிலிருந்தே ஐஎல் அண்ட் எஃப்எஸ் தீவிர நிதிச் சிக்கலில் இருந்துள்ளது. இந்நிலை யில் தர மதிப்பீட்டை குறைக்கா மல் இருக்க ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனம், தர மதிப்பீடு செய்த நிறு வனங்களுக்கு லஞ்சம் வழங்கி யுள்ளது. சில சமயங்களில் தணிக்கை செய்யப்படுவதை காலம் தாழ்த்துவதற்காக பொய் யான தகவல்களையும் வழங்கி யுள்ளது. மதிப்பீடு குறைக்கப் படாமல் இருப்பதற்காக பல்வேறு அழுத்தங்களை தர மதிப்பீடு நிறு வனங்களுக்கு ஐஎல் அண்ட் எஃப்எஸ் கொடுத்துள்ளதாக கிராண்ட் தோர்ண்டன் வெளியிட்ட இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தர மதிப்பீட்டு நிறு வனங்கள் கூறியதாவது, கிராண்ட் தோர்ண்டன் வெளிட்ட இடைக் கால அறிக்கை, தர மதிப்பீட்டு வழி முறைகள் குறித்து போதிய புரிதல் இல்லாமல் உருவாக்கப்பட்டதாக உள்ளது. ஒரு தரப்பின் தகவல்களை மட்டும் அடைப்படையாக கொண்ட தாக அந்த அறிக்கை உள்ளது என்று கூறியுள்ளன.