வணிகம்

27 ஆயிரம் ரூபாயை நெருங்கிய தங்கத்தின் விலை

செய்திப்பிரிவு

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.26,952-க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே உயர்ந்து வந்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் எதிரொலியாலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.26 ஆயிரத்து 952-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 369-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று ரூ.3 ஆயிரத்து 332-க்கு விற்கப்பட்டது.

அதேபோல 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.28 ஆயிரத்து 208 ஆக உயர்ந்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சங்கத்தினர் கூறும்போது, ''அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் டாலர் மதிப்பு சற்று குறைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனாலும் பங்குச்சந்தை, வரிவிதிப்பு உள்ளிட்ட காரணிகளாலும் தங்கத்தின் விலை சரசரவென உயர்ந்து வருகிறது.

இன்னும் சில நாட்களுக்குத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரக்கூடும்'' என்றனர்.

SCROLL FOR NEXT