வணிகம்

பிஎஸ்என்எல் சீரமைப்பு : மத்திய அரசு உறுதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி

அரசு தொலை தொடர்பு நிறுவன மான பிஎஸ்என்எல்-ஐ மேம் படுத்துவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுவருவதாக மாநிலங்களவையில் தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தை மீட்க அரசு பல் வேறு வழிமுறைகளை பரிசீலித்து வருகிறது.

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர் களுக்கு புதிய புதிய சேவை களை வழங்கிவந்த நிலையில் அந் நிறுவனங்களுக்கு போட்டியாக தக்கவைத்துக் கொள்ளும் அள விற்கு பிஎஸ்என்எல் தொழில் நுட்பக் கட்டமைப்பைக் கொண் டிருக்கவில்லை. இதனால் வாடிக் கையாளர்கள் குறைந்தநிலையில் அந்நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்தது. முறையான நிர்வாக மின்மை அதன் நஷ்டதுக்கு காரணம் என்று கூறப்படு கிறது.

பிஎஸ்என்எல்-லில் நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகப் படுத்தப்படும். தனியார் நிறு வனங்களுக்கு போட்டியாக செயல்படும் அளவுக்கு பிஎஸ் என்எல்-லின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்று ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

இந்நிலையில், 54,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கான எந்தவொரு திட்டத்துக்கும் பிஎஸ்என்எல் ஒப்புதல் அளிக்கவில்லை என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT