லண்டன்
இந்தியாவில் பன்முக இலச்சினை (மல்டி பிராண்ட்) முதலீட்டில் அன்னிய நிறுவனங்களுக்கான நேரடி முதலீட்டு வரம்பில் மாற்றம் ஏதும் செய்யும் திட்டம் இல்லை என்று மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.
லண்டனில் நடைபெற உள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சியை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் இக்கருத்தை அவர் தெரிவித்தார். மல்டி பிராண்டுகளைப் பொருத்தமட்டில் 49 சதவீத அளவுக்கு நேரடி அன்னிய முதலீடுகள் அனு மதிக்கப்படுகின்றன. இந்த அள வுக்கு அதிகமாக அனுமதிக்கும் திட்டம் கிடையாது. இதை அனைத்து அன்னிய முதலீட்டு நிறுவனங்களும் மதித்து நடக்க வேண்டும் என்றார்.
சமீபத்தில் பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான நபராகக் கருதப்படும் போரிஸ் ஜான்சன் பேசுகையில், இங்கிலாந்தின் செயின்ஸ்பரி மற்றும் வெயிட்ரோஸ் ஆகிய சங்கிலித் தொடர் நிறுவனங்கள் இந்தியாவில் பெருமளவில் விரிவாக்கம் செய்ய முடியவில்லை என தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பியுஷ் கோயலின் விளக்கம் அமைந்துள்ளது.
49% அளவுக்கு முதலீடுகள்
அன்னிய நேரடி முதலீடு களை அனுமதிக்கும் விஷயத் தில் மிகுந்த எச்சரிக்கையுடன் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறு வணிகர்கள் நாட்டு மக்களுக்கு பன்னெடுங் காலமாக சிறந்த சேவையளித்து வருகின்றனர். கிராமங்கள்தோறும் மக்களின் கலாசாரத்தோடு ஒன் றிணைந்து அவர்கள் சிறந்த சேவையை அளிக்கின்றனர். இதை மாற்ற அரசு ஒருபோதும் விரும் பாது என்றார்.
இந்தியாவில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்கள் 49 சதவீத அளவுக்கு முதலீடுகளை மேற் கொள்ளலாம். இதன் மூலம் வெளி நாட்டு நிறுவனங்கள் தனித்துவ உரிமை கொண்டாட முடியாது. ஒற்றை இலச்சினை (சிங்கிள் பிராண்ட்) நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இதன்படி இந்தியாவில் இந் நிறுவனங்கள் வளாகங்களை அமைத்து விரிவாக்கம் செய்ய அனுமதிக்கப்படுகிறது என்றார்.
30% அளவுக்கு கொள்முதல்
இந்நிறுவனங்களும் உள்நாட்டி லிருந்து 30 சதவீத அளவுக்கு பொருள்களை கொள்முதல் செய் தாக வேண்டும் என்ற வரம்பும் உள்ளது என்றார் கோயல். இந்தியாவும் இங்கிலாந்தும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வர்த்தக கூட்டத்திலும் பியுஷ் கோயல் பங்கேற்றார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், பிரெக்ஸிட்டிலிருந்து வெளி யேறுவதன் மூலம் சிறந்த வாய்ப்பு களை பிரிட்டன் கண்டறிய முடியும் என்றார். பிரெக்ஸிட் பிரச்சினை முடிவுக்கு வந்தால் மட்டுமே இங்கிலாந்து, பிற நாடுகளுடன் உறுதியான வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியும் என்றார்.