வணிகம்

பிவிஆர் நிகர லாபம் 7 மடங்கு உயர்வு

செய்திப்பிரிவு

பிவிஆர் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 7 மடங்கு உயர்ந்து 58.05 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 7.66 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.

நிகர விற்பனை 34 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 361 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 485 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

தவிர 500 கோடி ரூபாய்க்கு நிதி திரட்டவும் பிவிஆர் முடிவு செய்திருக்கிறது. பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு பிறகு இந்த நிதி திரட்டும் நடவடிக்கை தொடங்கப்படும். ஜூன் காலாண்டில் டிஎல்எப் நிறுவனத்தின் டிடி சினிமா நிறுவனத்தை 500 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

வர்த்தகத்தின் முடிவில் 5.25 சதவீதம் உயர்ந்து 857 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.

SCROLL FOR NEXT