வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பென்ஷன் பண்ட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஹேமந்த் காண்ட்ராக்டர் தெரிவித்தார்.
பென்ஷன் திட்டங்களில் வெளிநாட்டு இந்தியர்கள் முதலீடு செய்யலாமா கூடாதா என்பது குறித்த பல சந்தேகங்கள் இருந்துவந்தன. இது குறித்து ரிசர்வ் வங்கியின் கருத்தினை கேட்பதற்காக அனுப்பி வைத்தோம். சமீபத்தில் ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் அளித்தது.
இன்ஷூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் பண்ட்களை போலத்தான் பென்ஷன் பண்ட்களும் அதனால் பென்ஷன் திட்டங்களில் வெளிநாட்டு இந்தியர்கள் முதலீடு செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
பெமா(Foreign Exchange Management Act) விதிமுறைகள் குறித்து மத்திய அரசு விரைவில் விளக்கம் அளிக்கும் என்று ஹேமந்த் தெரிவித்தார்.