தேசிய திறன் வளர்ப்பு மற்றும் தொழில்முனைவு கொள்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள் ளது. இதன் மூலம் தொழில் முனைவு நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தவும், தேசிய அளவில் திறன் வளர்ப்புப் பயிற்சிகளை பெரிய அளவில் மேற்கொள்ளவும் முடியும்.
இந்த கொள்கையின் இலக்கு களாக தேவைக்கேற்ப திறன் மிக்கவர்களை உருவாக்குவது, தொழில்துறை ஒப்பந்தங்களை ஊக்கப்படுத்துவது போன்ற நட வடிக்கைகளை மேம்படுத்த முடி யும்.
மேலும் செயல்பாடுகளுக்கு ஏற்ப தரமான கட்டமைப்புகளை வடிவமைப்பது, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பிரச்சினைக் குரிய விவகாரங்களை அடை யாளம் காண்பது போன்றவற்றை இலக்குகளாக கொண்டுள்ளது என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.
இது குறித்து குறிப்பிட்ட அரசு அதிகாரிகள் இந்த கொள்கை முக்கியமாக நான்கு வகைகளில் செயல்படும் என்றனர். குறிப்பாக திறன் வளர்ப்பு மற்றும் இலக்கு களுக்கான தடைகளை கண் டறிவது, பொதுக் கல்விக்கான தடைகள், உற்பத்தி இலக்கு களுக்கு உள்ள தடைகள், குறைந்த தரத்திலான பயிற்சி கட்டமைப்பு கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள் ளிட்டவற்றில் கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்டனர்.