சிமென்ட் உற்பத்தியில் முன்னணியில் திகழும் சாங்கி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 1,500 கோடி முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 82 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இப்போது நிறுவனம் ஆண்டுக்கு 41 லட்சம் சிமென்ட் உற்பத்தி செய்கிறது. இதை இரண்டு மடங்காக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.