கடந்த பத்தாண்டுகளாக தங்கள் பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிதி உதவி செய்ததற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் பாராட்டு தெரிவித்திருக்கிறது.
1980களில் ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் முகேஷ் அம்பானி சேர்ந்து படித்தர். ஆனாலும் அப்போது அவரது தந்தை திருபாய் அம்பானிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்தியா திரும்ப வேண்டி இருந்தது. இதனால் சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு அறக்கட்டளை மூலம் நிதி உதவி செய்து வந்தார்.
தொடந்து பத்தாவது வருடமாக இந்த நிதி உதவியை முகேஷ் செய்துவருகிறார். அங்கு எம்பிஏ படிப்பதற்கு ஒவ்வொரு வருடமும் 86.8 லட்ச ரூபாய் செலவாகிறது. இதுவரை 12 மாணவர்களுக்கு முகேஷ் உதவி செய்திருக்கிறார்.
சிறப்பாக படிக்கும் மாண வர்கள் உங்கள் போன்றவர்களின் உதவி இல்லாமல் படித்திருக்க முடியாது என்று ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்திம் துணைத் தலைவர் மார்டின் ஷெல் தெரிவித் திருக்கிறார்.