திரிபுரா மாநில அரசுடன் மூன்று திட்டப் பணிகளை நிறைவேற்ற டாடா குழுமம் ஒப்பந்தம் செய் துள்ளது. குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தலைமை யிலான குழுவினர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட னர்.
மேற்கு திரிபுரா மாவட்டம் மற்றும் தலாய் மாவட்டங்களில் உள்ள இரண்டு தொழில்நுட்ப பயிற்சி மையங்களுக்கு (ஐஐடி) தொழில்நுட்ப பயிற்சியை இந் நிறுவனம் அளிப்பதற்கு முதலா வது ஒப்பந்தம் வகை செய்வதாக மாநிலத்தின் தலைமைச் செயலர் ஒய்.பி. சிங் தெரிவித்தார்.
இதேபோல தலாய் மாவட் டத்தில் அம்பாசா எனுமிடத்தில் பால் பண்ணை அமைப்பதற்கு இரண்டாவது ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. மாநிலத்தில் மீன் உற் பத்தியை அதிகரிப்பதற்கு மூன் றாவது ஒப்பந்தம் வகை செய் துள்ளது.