வணிகம்

15% டிவி சந்தையைக் கைப்பற்ற இலக்கு: மைக்ரோமேக்ஸ் ரூ.500 கோடி முதலீடு

செய்திப்பிரிவு

கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் செயல்பட்டு வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டில் 15 சதவீத தொலைக்காட்சி சந்தையைக் கைப்பற்ற இலக்கு நிர்ணயித் துள்ளது. இதற்கான புதிய ஆலை அமைக்க ரூ.500 கோடி முதலீடு மைக்ரோமேக்ஸ் திட்டமிட்டி ருக்கிறது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் தொலைக்காட்சி உற்பத்தித் தொழிலில் ஈடுபட் டுள்ளது. இப்போதைக்கு 8 சதவீத சந்தையை வைத்திருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபூர் என்னும் இடத்தில் இதற் கான ஆலையை அமைத்திருக் கிறது.

இந்த ஆலை மாதம் ஒரு லட்சம் டிவி உற்பத்தித் திறன் கொண்டது. அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கு புதிய ஆலை அமைக்க மைக்ரோ மேக்ஸ் திட்டமிட்டு வருகிறது.

இதுதொடர்பாக நிறுவனத்தின் இணை நிறுவனர் ராஜேஷ் அகர்வால் கூறியதாவது: புதிய ஆலையை ரூ.200 கோடி முதல் 500 கோடி ரூபாய் வரை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம்.

இப்போதைக்கு 50 சதவீத உதிரி பாகங்களை இந்தியாவில் உற்பத்தி செய்கிறோம். எஞ்சிய 50 சதவீத உதிரிபாகங்கள் வெளி நாட்டில் இருந்து இறக்குமதியா கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக எங்களது இறக்குமதியை குறைத்துகொள்ள திட்டம் வைத் திருக்கிறோம். 2020-ம் ஆண்டுக் குள் எங்களது வெளிநாட்டு இறக்குமதியை குறைத்து கொள்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மைக்ரோமேக்ஸ் இன்பர்மேட் டிக்ஸ் நிறுவனத்தின் வருமானத் தில் தொலைக்காட்சியின் பங்கு 7%. இந்த நிறுவனம் ஸ்மார்ட் போன், லேப்டாப் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை உற்பத்தி செய்கிறது.

SCROLL FOR NEXT