வணிகம்

எஸ்பிஐ உடன் இணைகிறதா பாரதிய மகிளா வங்கி?

செய்திப்பிரிவு

பாரதிய மகிளா வங்கியை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கலாமா என்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் யோசித்து வருவதாக தெரிகிறது. இருந்தாலும் இந்த பரிந்துரை மீது எந்தவிதமான இறுதி முடிவையும் நிதி அமைச்சகம் எடுக்கவில்லை.

இது குறித்து எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார் யாவிடம் கேட்டதற்கு, இந்த செய்தி எப்படி வந்தது என்று தெரியவில்லை. இதுவரை யாரும் என்னிடம் விவாதிக்கவில்லை, அமைச்சகத்தில் விவாதிக்கப்பட்டி ருக்கலாம் என்றார். அதேசமயத் தில் அந்த வங்கியை இணைப்பது பிரச்சினை அல்ல. இது குறித்து யோசிக்க தேவை இல்லை என்று கருத்து தெரிவித்தார்.

முந்தைய மத்திய அரசாங் கத்தால் மகிளா வங்கி. 2013-ம் ஆண்டு பெண்களுக்காக தொடங் கப்பட்டது. 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 60 கிளைகள் உள்ளன.

கடந்த 2008-ம் ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் சௌராஷ்ட்ரா எஸ்பிஐ உடன் இணைக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பிறகு 2010-ம் ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தூர் எஸ்பிஐ உடன் இணைக்கப்பட்டது.

அதன் பிறகு எஸ்பிஐ-யின் துணை வங்கிகளை இணைப்பது குறித்து பலமுறை விவாதிக்கப்பட்டாலும் கடந்த ஐந்து வருடங்களில் எந்த இணைப்பும் நடக்கவில்லை.

இப்போதைக்கு பொதுத்துறை வங்கிகளில் பட்டியலிடப்படாத வங்கி பாரதிய மகிளா வங்கி மட்டுமே. 2013-14ம் நிதி ஆண்டில் (ஐந்து மாதங்களில்) இந்த வங்கி சுமார் ரூ.12.26 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

SCROLL FOR NEXT