வணிகம்

விவசாயிகளுக்கு முன்னுரிமை தருவோம்: மத்திய வேளாண் அமைச்சர்

செய்திப்பிரிவு

விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து உணவுப் பொருள்களின் விலை குறைவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் கூறினார்.

விவசாயிகளுக்கு முழு அதிகாரம் அளிக்கப்படும். இதன் மூலம் வேளாண் பொருள்களின் விலை குறையும் என்று அவர் கூறினார். மத்திய அமைச்சராக பதவியேற்ற போதிலும் புதன்கிழமைதான் தான் பொறுப்பேற்கப் போவதாக தெரிவித்தார். ஜனசங்கத்தில் தீவிர உறுப்பினராக இருந்து பாஜக-வில் தீவிர தொண்ட னான 64 வயது ராதா மோகன் சிங் பிகாரைச் சேர்ந்தவர். தேர்தல் பிரசாரத்

தின்போதே மோடி இவரை புகழ்ந்துரைத்தார். மோதிஹரி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு இப்போது மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. 1989-ம் ஆண்டிலிருந்து இத்தொகுதியில் தொடர்ந்து 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும இவருக்குண்டு. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ரயில், தொலைத் தொடர்பு, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, போக்குவரத்து மற்றும் வெளி விவகாரத்துறைகளின் குழுக்களில் இவர் இடம் பெற்றி ருந்தார்.

SCROLL FOR NEXT