வணிகம்

சென்னையில் மோட்டார் வாகன பொறியியல் கண்காட்சி

செய்திப்பிரிவு

சென்னை நத்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மோட்டார் வாகன பொறியியல் கண்காட்சியை தமிழக தொழில்துறை அமைச்சர் பி. தங்கமணி நேற்று தொடங்கி வைத்தார். ஜூலை 09 வரை நடக்கும் இக்கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.

கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் தங்கமணி, ஆட்டோ மோட்டிவ் துறை வளர்ச்சியில் உலக அளவில் முன்னணி 10 இடங்களுக்குள் சென்னை உள்ளது என்று கூறினார். சென்னையில் ஒரு நிமிடத்தில் 3 கார்களும், 1 வர்த்தக வாகனமும் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த அளவுக்கு நமது உற்பத்தி திறன் உள்ளது என்றார்.

தமிழ்நாட்டில் 4 நவீன துறை முகங்களும் தொழில்துறையி னருக்கான வளர்ச்சிப் பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது என்றார். தொழில்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க செப்டம்பர் 09 மற்றும் 10-ம் தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர் சந்திப்பை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்றும் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார்.

இந்த கண்காட்சியை ஜெர்மனி யைச் சேர்ந்த மெசி பிராங்க்பர்ட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. உலக அளவில் மோட்டார் வாகன கண்காட்சிகளை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது.

கண்காட்சி குறித்து பேசிய இதன் நிர்வாக இயக்குநர் ராஜ் மானேக் வாகன உற்பத்தி சந்தையில் உலக அளவில் சென்னை முக்கிய இடத்தை வகிக்கிறது. தற்போது இந்திய அரசு மேற்கொண்டுவரும் மேக் இன் இந்தியா திட்டம் மோட்டார் வாகன உற்பத்தியிலும் நிறைய மாற்றங்களை உருவாக்கும். உள்நாட்டு தொழில் வளர்ச்சி இதன் மூலம் மேம்படும் என்றார்.

SCROLL FOR NEXT