வணிகம்

ஹீரோ மோட்டார்ஸ் குழும தலைவராகிறார் பங்கஜ் முஞ்ஜால்

பிடிஐ

ஹீரோ மோட்டார்ஸ் குழும தலைவராக பொறுபேற்கிறார் பங்கஜ் முஞ்ஜால். சைக்கிள் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இந்த நிறுவனம் உள்ளது.

60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த ஓம் பிரகாஷ் முஞ்ஜால் ஓய்வு பெறுவதை அடுத்து, அவரது பொறுப்புக்கு பங்கஜ் முஞ்ஜால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுமம் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. ஹீரோ சைக்கிள் மற்றும் ஆட்டோமொபைல் உதிரி பாக நிறுவனமான ஹீரோ மோட்டார்ஸ் மற்றும் ஹீரோ சேசிஸ் சிஸ்டம்ஸ், முன்ஜால் கிரியூ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஓட்டல் துறையிலும் ஈடுபட்டுள்ளது.

பங்கஜ் முஞ்ஜால் இந்த குழுமத்தில் 1988ல் பயிற்சியா ளராக பணிக்குச் சேர்ந்தவர். 2011 ஆம் ஆண்டு துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார்.

இந்நிறுவனம் ஆண்டுக்கு 75 லட்சம் சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு பஞ்சாப், பிஹார், உத்தர பிரதேச மாநிலங்களில் ஆலைகள் உள்ளன.

SCROLL FOR NEXT