வணிகம்

அனில் அகர்வால் போனஸ் 28% உயர்வு

செய்திப்பிரிவு

லண்டனைச் சேர்ந்த வேதாந்த குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் போனஸ் 28 சதவீதம் உயர்ந்து 8.97 லட்சம் பவுண்ட்களாக (சுமார் ரூ.8.85 கோடி) உள்ளது.

ஆனால் அகர்வாலின் அடிப்படை சம்பளத்தில் எந்தவிதமான மாற்ற மும் செய்யப்படாமல் 16 லட்சம் பவுண்ட்களாக உள்ளது.

2013-14ம் ஆண்டு அகர்வாலின் போனஸ் 7 லட்சம் பவுண்ட்களாக இருந்தது. இப்போது 28% உயர்த்தப் பட்டிருக்கிறது.

அனில் அகர்வாலின் சகோதரர் நவீன் அகர்வாலின் போனஸ் 3.90 லட்சம் பவுண்ட்களில் இருந்து 5.33 லட்சம் பவுண்ட்களாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT