வணிகம்

டாய்ஷ் வங்கியுடன் இன்போசிஸ் கூட்டு

பிடிஐ

பெங்களூருவைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் இன்போசிஸ் நிறுவனம் டாய்ஷ் வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள் ளது. பல லட்சம் யூரோ மதிப்பி லான இந்த ஒப்பந்தம் பல ஆண்டு களுக்கு நீடிக்கக் கூடியது.

இந்த ஒப்பந்தத்தின்படி இன்ஃபோசிஸ் நிறுவனம் டாய்ஷ் வங்கிக்கான சாப்ட்வேர் மேம்பாடு, டிஜிட்டல் அண்ட் மொபிலிட்டி, பேக்கேஜ் இம்பிளிமென்டேஷன் உள்ளிட்ட பணிகளை டாய்ஷ் வங்கியின் குழுமத்துக்கு மேற்கொள்ளும்.

டாய்ஷ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதற்குத் தேவையான சாஃப்ட்வேர் மற்றும் அது சார்ந்த நிர்வாகப் பணிகளை இன்போசிஸ் மேற்கொள்ளும் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் சர்வதேச நிதி பிரிவின் செயல் துணைத் தலைவர் மொகித் ஜோஷி தெரிவித்தார்.

வங்கி வாடிக்கையாளர் களுக்கு மேம்பட்ட சேவை அளிப்பதில் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ளும் பணியில் டாய்ஷ் வங்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சாப்ட்வேர் உள்ளிட்டவற்றை இன்போசிஸ் அளிப்பதற்கு ஒப்பந்தம் வகை செய்துள்ளது.

SCROLL FOR NEXT