வரி செலுத்தும் முறைகளை எளிமையாக்கவும், வரி செலுத்து வதில் உள்ள சிரமங்களை முழுமையாக நீக்குவதற்கும் மத்திய நேரடி வரி ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் தலைவர் அனிதா கபூர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது.
வரி செலுத்துவதற்கு எந்த மாற்றும் உருவாக்க முடியாது. ஆனால் வரி செலுத்தும் முறை களையும், வரி செலுத்துபவர்களின் அனுபவத்தையும் மாற்றலாம். வரி செலுத்தும் முறையை எளிமை யாக்க முடியும்.
வரி செலுத்து பவர்களுக்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்கப்படும். அவர்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்து தெரி விக்கும் பட்சத்தில், உடனுக்குடன் அந்த குறைகள் நிவர்த்தி செய் யப்படும்.
மேலும் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்ற சந்தேகங்களுக்கு வரி ஆணையம் தேவையான உதவிகளை செய்யும். பெரும்பாலான மக்க ளுக்கு மிகச்சில சந்தேகங்கள் மட்டுமே உள்ளன.
அவர்களின் சந்தேகத்துக்கு பதில் கொடுக்கும் போது அவர்கள் எளிதாக வரி செலுத்துவார்கள். வரி செலுத்தும் முறையை எளிமையாக்கினால் வரி செலுத்துபவர்களின் எண்ணிக் கையும் உயரும்.