வணிகம்

சில மாதங்களுக்கு பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் இருக்கும்: டாய்ஷ் வங்கி கணிப்பு

பிடிஐ

இந்திய பங்குச்சந்தைகள் இன்னும் சில மாதங்களுக்கு ஏற்ற இறக்கத்தில் இருக்கும் என்றும், பொருளாதார புள்ளி விவரங்கள் சிறப்பாக மாறுவதற் காக முதலீட்டாளர்கள் காத்திருக் கிறார்கள் என்றும் டாய்ஷ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் வங்கியின் வட்டி விகித முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்துதான் இந்திய பங்குச்சந்தை எந்த திசையில் செல்கிறது என்பதை கணிக்க முடியும் என்று இந்த வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த வாரம் ரிசர்வ் வங்கி 0.25 சதவீத வட்டி குறைத்திருந்தாலும், பருவமழை குறைவாகப் பெய்யும் என கணிக்கப்பட்டதால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்தன. கடந்த வாரம் சென் செக்ஸ் 1059 புள்ளிகள் சரிந்தன.

பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். கடன் சந்தையில் 130 கோடி டாலர் முதலீடு வெளியேறி உள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறினாலும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்கள். இந்திய மக்கள் நிதி சார்ந்த சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது என்று டாய்ஷ் வங்கி தெரிவித் திருக்கிறது.

இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கூட, மே மாதத்தில் பங்குச்சந்தை சிறப்பாக செயல்பட்டது. கடந்த மே மாதம் சென்செக்ஸ் 3 சதவீதம் உயர்ந்தது. மே மாத பட்டியலில் சென்செக்ஸ் 3-வது இடத்தில் உள்ளது. மே மாதம் ஜப்பான் சந்தை 5.3 சதவீத ஏற்றமும் சீனா சந்தை 3.8 சதவீத ஏற்றமும் அடைந்தது.

ரூ.1,600 கோடி அந்நிய முதலீடு

மே மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறி னாலும் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் ரூ.1,600 கோடி நிகர முதலீடு செய்திருக்கிறார்கள்.

மாறாக இந்திய கடன் சந்தையில் இருந்து ரூ.1,883 கோடி அளவுக்கு வெளியே எடுத்திருக்கிறார்கள். கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை ரூ.44,000 கோடி அளவுக்கு நிகர அந்நிய முதலீடு வந்திருக்கிறது. கடந்த மே மாதம் மட்டும் ரூ.14,000 கோடி வெளியேறி உள்ளது.

நடப்பாண்டில் இதுவரை 760 கோடி டாலர் அந்நிய முதலீடு வந்திருந்தாலும், இந்தியாவை விட கொரியா, தாய்வான் நாடுகளுக்கு அந்நிய முதலீடு அதிக அளவு சென்றிருப்பதாக ஹெச்.எஸ்.பி.சி. தெரிவித்திருக்கிறது.

கொரியாவுக்கு 860 கோடி டாலரும், தாய்வான் சந்தைக்கு 800 கோடி டாலரும் முதலீடாக சென்றுள்ளன. நடப்பாண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஆசிய சந்தைக்கு (ஜப்பான் தவிர்த்து) 2,540 கோடி டாலர் முதலீடு வந்திருக்கிறது என்று ஹெச்.எஸ்.பி.சி தெரிவித்திருக்கிறது.

SCROLL FOR NEXT