வணிகம்

முதல் முறையாக 6,952 புள்ளிகளை எட்டியது நிப்டி

செய்திப்பிரிவு

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏறுமுகத்தில் தொடங்கியது.

வர்த்தக துவக்கத்தில், சென்செக்ஸ் 338.67 புள்ளிகள் உயர்ந்து 23,332.90 புள்ளிகளாக இருந்தது. நிப்டி 6,952.40 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது. முதல் முறையாக நிப்டி 6,900 புள்ளிகளை எட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.

ஜப்பானின் நிக்கெய், ஹாங்காங்கின் ஹன்சென் போன்ற ஆசிய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏறுமுகத்தில் இருந்தது இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளதாக பங்கு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

பங்குச்சந்தையின் அண்மைக்கால் எழுச்சி குறித்து டெல்லியைச் சேர்ந்த பங்கு வர்த்தகர் மனோஜ் சோராரியா கூறுகையில்: "மக்களவை தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் நிலையான ஆட்சி அமையும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருவதால் அனைத்து துறை பங்குகளையும் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே அண்மை காலமாக பங்குச்சந்தை ஏறுமுகத்தில் இருக்கிறது" என்றார்.

இதேபோல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து 59.96 என்ற நிலையில் வர்த்தகமாகியிருந்தது.

SCROLL FOR NEXT