வணிகம்

பொருளாதார சீர்திருத்தங்களால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேச்சு

பிடிஐ

சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இந்திய பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீண்டும் உருவாக ஆரம்பித்திருக்கிறது. இந்த நம்பிக்கை இன்னும் தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்தின் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது இந்தியா மீதான நம்பிக்கை கொஞ்சம் கொஞ் சமாக உருவாகி வருகிறது என்று அமெரிக்காவில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது குறிப்பிட் டார். அவர் மேலும் கூறியதாவது.

நம்பிக்கை வருவதற்கு அரசின் செயல்பாடுகள் காரணம். முதலாவது சீர்த்திருத்தங்களை கொண்டு வருவதில் அரசு தெளிவாக உள்ளது. சிலவற்றை செய்திருக்கிறது, சிலவற்றை கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது.

இரண்டாவதாக சர்வதேச பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது. முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டுக்கு ஏற்ற நாடுகளைத் தேடிவருகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சி மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைக்கிறார்கள்.

முதலீட்டாளர்களிடம் பேசும் போது சில விஷயங்கள் தெளி வாகப் புரிந்தன. அவர்கள் நிச்சயமற்ற சூழ்நிலையையும், வெளிப்படை இல்லாத தன்மையையும் விரும்ப வில்லை. அதனால் எங்களது அரசு நிச்சயமற்ற தன்மையை ஊக்குவிக்கவில்லை. தெளிவான வெளிப்படையான கொள்கை களை உருவாக்கு கிறோம்.

கட்டுமானத் திட்டங்களுக்கு நீண்டகால நோக்கில் முதலீடு தேவை. இந்தத் துறையில் செய்யப்படும் முதலீடுகளின் மீது வருமானம் கிடைக்க பல வருடங்கள் ஆகிவிடுகின்றன. இதை குறைப்பதற்கு கட்டுமானத் திட்டங்கள் குறித்த நேரத்தில் முடிக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் முதலீட்டா ளர்கள் இந்தியாவுக்கு வருவார் கள் என்றார்.

SCROLL FOR NEXT