வணிகம்

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவில் வைப்புத் தொகைக்கு வட்டி குறைப்பு

செய்திப்பிரிவு

பொதுத்துறை வங்கியான யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வைப்பு தொகைக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்தது. ஒரு வருடத்துக்குள் இருக்கும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாகவும் அதற்கு மேலே உள்ள காலத் துக்கு 7.75 சதவீதமாகவும் வட்டியை நிர்ணயம் செய்துள்ளது.

தற்போது ஒரு வருடத்துக்கு மேலே உள்ள டெபாசிட்களுக்கு 8.25 சதவீதம் வட்டி கொடுக் கப்படுகிறது.

இந்த புதிய வட்டி விகிதங்கள் வரும் ஜூன் 8-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. ஏற்கெ னவே பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி போன்றவை வைப்பு தொகைக் கான வட்டியை குறைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பல வங்கிகள் தங்க ளுடைய அடிப்படை வட்டி விகிதத்தை குறைத்திருக்கின்றன.

SCROLL FOR NEXT