பந்தன் பைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனம் வங்கி தொடங்குவதற் கான இறுதி அனுமதியை ரிசர்வ் வங்கி நேற்று வழங்கியது. வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி வங்கி தொடங்குவதற்கு பந்தன் திட்டமிட்டு வருகிறது.
கொள்கை அளவில் வங்கி தொடங்குவதற்கு கடந்த ஏப்ரல் 2014-ம் ஆண்டில் பந்தன் பைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனத் துக்கு அனுமதி கிடைத்தது.
மனிதவளம், விளம்பரம், பிராண்டிங், வங்கி செயல்பாடு உள்ளிட்ட பணிகளை கவனிப்பதற்கு ஐந்து சிறப்பு நிறுவனங்களை பந்தன் நியமித்தது.
இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன், சிங்கப்பூரை சேர்ந்த ஜிஐசி மற்றும் இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி ஆகிய நிறுவனங்கள் மூலமாக சமீபத்தில் ரூ.1,020 கோடி நிதி திரட்டியது. இப்போது இந்த வங்கியின் நெட்வொர்த் ரூ.2,700 கோடியாக உள்ளது. குறைந்தபட்சம் 500 கோடி ரூபாய் இருக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கி விதியாகும்.
வங்கி தொடங்குவதற்காக 850 பணியாளர்களை வேலைக்கு எடுத் திருக்கிறது. தவிர பந்தன் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் 17,000 நபர்கள் பணியில் உள்ளார்கள்.
இந்தியா முழுவதும் 500-600 வங்கி கிளை தொடங்க வேண்டும் என்பது எங்களது திட்டம் என்று வங்கியின் தலைவர் சந்திரசேகர் கோஷ் தெரிவித்தார்.
வங்கி தொடங்குவதற்கு 25 நிறுவனங்கள் விண்ணப் பித்திருந்தன. இதில் பந்தன் மற்றும் ஐடிஎப்சி ஆகிய நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.