வசதி படைத்தவர்கள் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மூன்று மாதத்துக்கு முன்பு பிரதமர் மோடி கூறினார். இதுவரை 0.35 சதவீத பயனாளிகள் மட்டுமே மானியத்தை விட்டுக்கொடுத் திருக்கிறார்கள்.
நாட்டில் மொத்தம் 15.3 கோடி எல்.பி.ஜி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இதில் 5.5 லட்சம் பயனாளிகள் மட்டுமே மானியத்தை விட்டுக் கொடுத்திருப்பதாக பெட்ரோலிய அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஜனவரி மாதத்தில் இருந்து இந்த கோரிக் கையை வைத்தார். அதுபோல பிரதமர் மோடி மார்ச் மாதத்தில் மானியத்தை விட்டுக் கொடுக்கும்படி கேட்டார். எல்.பி.ஜி முன்பதிவு செய்யும்போது அதற்கான குறுஞ்செய்திகள் வந்தன. ஆனால் இதுவரை 0.35 சதவீத பயனாளிகள் மட்டுமே விட்டுக்கொடுத்திருக்கிறார்கள்.
எம்.பி. எம்.எல்.ஏ. அரசு உயரதிகாரிகள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் ஆகியோ ருக்கும் இந்த கோரிக்கை விடுக்கப் பட்டிருந்தாலும், ஆளும் கட்சி யை சேர்ந்த சில எம்.பி.கள் கூட மானியத்தை விட்டுக் கொடுக்க வில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார். காஸ் மானியத்தை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் விட்டுக்கொடுத்திருக்கிறார்கள்.
தற்போது மானியம் இல்லாத காஸ் விலை (14.2 கிலோ) 625.50 ரூபாயாக இருக்கிறது.