வணிகம்

கெய்ர்ன் இந்தியா செலுத்த வேண்டிய ரூ.20,495 கோடி வரி பாக்கிக்கு வேதாந்தா பொறுப்பேற்க வேண்டும்: மூடி’ஸ் முதலீட்டாளர் அமைப்பு வலியுறுத்தல்

பிடிஐ

கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை வேதாந்தா குழுமத்துடன் இணைக்கும் அதேசமயத்தில் கெய்ர்ன் இந்தியா நிறுவனம் செலுத்த வேண்டிய 320 கோடி டாலர் (ரூ. 20,495 கோடி) தொகைக்கு வேதாந்தா குழுமம் பொறுப்பேற்க வேண்டும் என மூடி’ஸ் முதலீட்டாளர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் வருமான வரித்துறையினர் ரூ. 20,495 கோடி வரி செலுத்த வேண்டும் என கெய்ர்ன் இந்தியா நிறுவனத் துக்கு நோட்டீஸ் அனுப்பியது. கெய்ர்ன் இந்தியா நிறுவன பங்கு பரிவர்த்தனை மூலம் அதன் முன்னாள் தாய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி மூலதன ஆதாயம் அடைந்தது. அதற்குரிய வரி செலுத்தவில்லை என்று வருமான வரித்துறையினர் குறிப்பிட்டனர்.

கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை வேதாந்தா குழுமத்துடன் இணைப் பதால் வேதாந்தா குழுமத்துக்குள்ள கடன் சுமை குறையும். அதே சமயம் கெய்ர்ன் இந்தியா செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை வேதாந்தா குழுமம் ஏற்க வேண்டும் என்று மூடி’ஸ் குறிப்பிட்டுள்ளது. 2006-ம் ஆண்டு இந்த பரிவர்த்தனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கெய்ர்ன் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ள வரி நோட்டீஸை எதிர்த்து அந்நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

அனில் அகர்வாலுக்குச் சொந்த மான வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்துடன் கெய்ர்ன் இந்தியா நிறுவனம் இணைவதற்கு இரு நிறுவன இயக்குநர் குழுமமும் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது.

இந்த இணைப்புக்கு பிறகு வேதாந்தா நிறுவனம் மட்டுமே பங்குச்சந்தையில் வர்த்தகமாகும். கெய்ர்ன் இந்தியா பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருந்து விலக்கிக் கொள்ளப்படும்.

கெய்ர்ன் இந்தியாவின் ஒவ்வொரு பங்குக்கும் ஒரு வேதாந்தா பங்கு வழங்கப்படும். கூடவே 10 ரூபாய் மதிப்புள்ள மாற்றத்தக்க முன்னுரிமை பங்கு ஒன்றும் வழங்கப்படும். இந்த இணைப்பினை வரும் 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிப்பதற்கு நிறுவனங்கள் திட்ட மிட்டுள்ளன.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 64 டாலராக உள்ளது. அதேசமயம் சரிந்து வரும் அலுமினிய விலை காரணமாக வேதாந்தாவின் பங்கு மதிப்பு குறைகிறது. இதை ஈடுகட்ட கெய்ர்ன் இணைப்பு மூலமான வருவாய் உதவும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவ னத்தின் சிக்கலான கட்டமைப்பு முறையை எளிமையாக்க இந்த இணைப்பு உதவும். அத்துடன் துணிச்சலாக நிதி சார்ந்த விஷயங் களில் முடிவுகள் எடுக்கவும் இது உதவும் என்று சௌபால் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 2015 நிலவரப்படி வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் கடன் தொகை 1,670 கோடி டாலராகும். இதில் 770 கோடி டாலர் கடன் தொகையானது பிஏ3 என்ற பட்டியலில் வருகிறது.

இப்போதைய இணைப்பின் மூலம் கெய்ர்ன் நிறுவன வருவாயின் மூலம் கடன் சுமையை வேதாந்தா குறைத்துக்கொள்ள முடியும்.

SCROLL FOR NEXT