லக்னோ
தைவானைச் சேர்ந்த மின்னணு உற்பத்தியாளர்கள் சங்கம் (டிஇஇஎம்ஏ) கிரேட்டர் நொய்டாவில் 20 கோடி டாலர் (ரூ. 1,240 கோடி) முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
டிஇஇஎம்ஏ-வைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரான்கோயிஸ் டிசாய் தலைமையில் 7 பேரடங்கிய குழுவினர் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலர் அலோக் ரஞ்சனை சந்தித்து முதலீடு குறித்து ஆலோசனை நடத்தினர். கிரேட்டர் நொய்டாவில் உள்ள தொழில்பேட்டையில் தைவான் நிறுவனங்கள் அமைக்க ஆர்வம் தெரிவித்தனர்.
தைவான் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படும் என தலைமைச் செயலர் உறுதியளித்தார்.
வங்கி, பொழுதுபோக்கு மையம், திறன் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட வசதிகளை மாநில அரசு ஏற்படுத்திக் கொடுக்க உள்ளது.
இப்பகுதியில் உற்பத்தி ஆலை களை அமைக்கும் தைவான் நிறுவனங்கள இங்கிருந்து பெரிய நிறுவனங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் என தெரிகிறது.