வணிகம்

சன் டிவி பங்குகள் 25% அளவில் அதிரடி வீழ்ச்சி

செய்திப்பிரிவு

சன் குழுமத்தின் 33 சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்ட நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை சன் டி.வி. பங்குகள் 25% வீழ்ச்சியடைந்தது.

மேலும், பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளதால் சேனல்களின் ஒளிபரப்பு உரிமை ரத்தாகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

சேனல்கள் ஒளிபரப்பு ரத்தாகும் என கூறப்படுவதல் பங்குச்சந்தையில் சன் டி.வி. பங்குகள் பெரும் சரிவைக் கண்டுள்ளதாக பங்கு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சன் குழுமத்தின் 40 பண்பலை வானொலி ஒலிபரப்புக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய அரசு மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. | அதன் விரிவான தகவல்:>சன் குழுமத்தின் 33 சேனல்கள் ரத்தாகுமா? |

SCROLL FOR NEXT