வணிகம்

காபி உற்பத்தி புதிய உச்சத்தை தொடும்

பிடிஐ

காபி உற்பத்தி புதிய உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. காபி வருடம் என்பது அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலமாகும். வரும் அக்டோபர் முதல் தொடங்கும் ஆண்டில் 3,55,600 டன் அளவுக்கு காபி உற்பத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு காபி வருடத்தில் 3,27,000 டன் காபி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த காலகட்டத்துக்கு 3,31,000 டன் அளவுக்கு உற்பத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியாவில் கர்நாடக மாநிலம் காபி உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கிறது. தற்போதைய வருடத்தில் கர்நாடக மாநிலத்தில் 2,33,230 டன் காபி உற்பத்தி செய்யப்பட்டது. காபி சாகுபடிக்கு ஏற்ற உரிய தட்பவெப்ப நிலை நிலவியதே இதற்குக் காரணமாகும். ஹசன், குடகு, சிக்மகளூர் ஆகிய மாவட்டங்கள் காபி உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாவட்டங்கள் ஆகும்.

கேரள மாநிலத்தில் காபி உற்பத்தி 69,800 டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 67,700 டன் இங்கு உற்பத்தியானது.

தமிழகத்தில் 17,875 டன்னி லிருந்து 18,800 டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் 9,700 டன்னும், ஒடிசாவில் 600 டன்னும் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை இரண்டும் காபி பயிரிடும் வழக்கமான மாநிலங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவிலான காபி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 4 சதவீதம் முதல் 5 சதவீதமாகும்.

SCROLL FOR NEXT