மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், தன்வசம் இருக்கும் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்துவருகிறார். இதே வேகத்தில் அவர் பங்குகளை விற்கத்தொடங்கினால் 2018-ம் ஆண்டுக்குள் அந்த நிறுவனத்தில் தனக்கு இருக்கும் மொத்த பங்குகளை விற்றிருப்பார்.
இப்போதைய நிலைமையில் மைக்ரோசாஃப்ட் முன்னாள் தலைவர் ஸ்டீவ் பால்மரை விட குறைவான பங்குகளையே பில்கேட்ஸ் வைத்திருக்கிறார். பால்மர் வசம் 333 மில்லியன் பங்குகள் இருக்கிறது. பில் கேட்ஸ் 330 மில்லியன் பங்குகளை வைத்திருக்கிறார்.
மொத்த மைக்ரோசாஃப்ட் பங்குகளில் இவர்கள் இருவருக்கும் இருப்பது 4 சதவீதமாகும். 1986-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடும்போது பில் கேட்ஸ் வசம் 49 சதவீத பங்குகள் இருந்தது. 2000-ம் ஆண்டு தன்னுடைய நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து விலகி தன்னுடைய நண்பர் ஸ்டீவ் பால்மரிடம் சி.இ.ஓ. பொறுப்பை ஒப்படைத்தார் பில் கேட்ஸ்.