வணிகம்

அதிக சொத்துள்ள தனிநபர்கள் பட்டியல்: 4-வது இடத்தில் இந்தியா

செய்திப்பிரிவு

அதிக சொத்து உள்ள தனிநபர்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. 10 கோடி டாலர் அதாவது ரூ. 640 கோடிக்கும் அதிகமான சொத்துகள் கொண்ட நபர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியா மற்றும் சீனா வில் அதிகரித்துவரும் பொரு ளாதார நடவடிக்கையால் தனிநபர் சொத்து மதிப்பு அதிகரித் துள்ளது. குறிப்பாக ஆசிய, பசிபிக் பிராந்தியத்தில் இது போன்று அதிக சொத்து கொண்ட தனி நபர்கள் அதிகரித் துள்ளதாக குளோபல் வெல்த் 2015 எனும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (பிசிஜி) தயாரித்துள்ளது.

அதிக சொத்துள்ள தனிநபர் எண்ணிக்கையில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் (5,201) உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சீனாவும் (1,307), இங்கிலாந்தும் (1,019) உள்ளன. நான்காவது இடத்தில் உள்ள இந்தியாவில் 928 தனிநபர்கள் உள்ளனர். ஐந்தாவது இடத்தில் ஜெர்மனி (679) உள்ளது.

2013-ம் ஆண்டில் இந்தி யாவில் மொத்தம் 284 நபர்கள் இருந்தனர். இது 2014-ல் பன்மடங்கு உயர்ந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

2016-ம் ஆண்டில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள வர்களின் சொத்து மதிப்பு 57 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது வட அமெரிக்க சொத்து மதிப்பான 56 லட்சம் கோடி டாலரை விட அதிகமாகும்.

இந்தியா, சீனாவில் தனி நபர் சொத்து உயர்வுக்கு பங்குச் சந்தை முதலீடுகள் முக்கிய காரணமாகும். சீனாவில் பங்குச் சந்தை 38 சதவீதமும், இந்தியாவில் 23 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT