வணிகம்

நிகேஷ் அரோராவின் சம்பளம் ரூ.856 கோடி

செய்திப்பிரிவு

ஜப்பானின் தொலைத்தொடர்பு நிறுவனமான சாப்ட் பேங்க் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியான நிகேஷ் அரோராவின் சம்பளம் 856 கோடி ரூபாய். இந்த நிறுவனம் ஜப்பானிய பங்குச் சந்தையான நிக்கிக்கு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிறந்த நிகேஷ் அரோரா இதற்கு முன்பு கூகுள் நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் சாப்ட் பேங்க் நிறுவனத்துக்கு மாறினார். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான சம்பளமாக 856 கோடி ரூபாய் (13.5 கோடி டாலர்) கொடுத்திருக்கிறது சாப்ட் பேங்க்.

இந்த சம்பளம் ஒருமுறை வழங்கப்படும் போனஸ் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் சேர்த்துதான் என்று ஜப்பானில் வெளியாகும் பிஸினஸ் நாளிதழ் கூறியிருக்கிறது.

சாப்ட்பேங்க் நிறுவனர் மற்றும் தலைவர் மசயோஷி சன் விரைவில் ஒய்வு பெறுவதை அடுத்து அடுத்த தலைவராகும் வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் நிகேஷ் அரோராவும் இருக் கிறார்.

SCROLL FOR NEXT