வணிகம்

பிரிக்ஸ் வங்கியின் தலைவராக பொறுப்பேற்கிறார் காமத்

செய்திப்பிரிவு

பிரிக்ஸ் நாடுகள் கட்டமைத்த புதிய மேம்பாட்டு வங்கியின் தலைவராக கேவி காமத் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் தலைவர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது.

`கே.வி. காமத் அடுத்த வாரம் சீனா செல்கிறார். ஜூலை முதல் வாரத்தில் தலைவராக பொறுப் பேர்பார்’ என்று நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து (பிரிக்ஸ்) தலா 1,000 கோடி டாலர் முதலீட்டில் இந்த வங்கியை தொடங்குகிறது. இந்த வங்கியின் தலைவராக காமத் ஐந்து ஆண்டுகளுக்கு இருப்பார். இன்னும் ஒரு வருடத்தில் இந்த வங்கியின் செயல்பாடுகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT