வணிகம்

ஹெச்1 பி விசா விவகாரம்: டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களிடம் அமெரிக்க அரசு விசாரணை

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் பணிபுரிய தற் காலிகமாக வழங்கப்படும் ஹெச்1 பி விசா விதிகளை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களிடம் அமெரிக்க அரசு விசாரணையை தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் தொழிலாளர் துறை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளது. தெற்கு கலிபோர்னியாவில் உள்ளது எடிசன் மின் நிறுவனம். இந்நிறுவனம் சமீபத்தில் 500 பணியாளர்களுக்கு ஊதியமில்லா ஓய்வு (லே-ஆப்) அளித்தது.

இவர்களில் பெரும்பாலானவர் கள் வெளிநாடுகளிலிருந்து ஹெச்1 பி விசாவில் வந்திருந்த ஊழியர்களுக்கு பயிற்சி அளித்த தாக கூறியுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்திய நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களால் அழைத்து வரப்பட்ட ஊழியர்களாவர்.

இது விஷயத்தை இலிநாய்ஸ் மாகாண செனட் உறுப்பினர் ரிச்சர்ட் டர்பின் மற்றும் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினர் ஜெஃப் செஷன்ஸ் ஆகியோர் அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். இதையடுத்து அமெரிக்க தொழிலாளர் துறை விசாரணையைத் தொடங்கி யுள்ளது.

இதனால் பங்குச் சந்தையில் டிசிஎஸ் பங்குகள் 2.5 சதவீதமும், இன்போசிஸ் பங்குகள் 1.13 சதவீதமும் சரிந்தன.

ஹெச்1 பி விசாக்கள் மிகச் சிறந்த தொழில்நுட்ப பணியாளர் களுக்கு மட்டுமே வழங்கப்படுவ தாகும். அத்தகைய விசா மூலம் வந்தவர்களுக்கு எடிசன் பணி யாளர்கள் பயிற்சி அளித்துள்ள தால், இந்த விசா முறையை இந்நிறுவனங்கள் தவறாகப் பயன் படுத்தியதாக குற்றம் சாட்டப்பட் டுள்ளது. இந்தச் செய்தியை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியாக வெளியிட்டதைத் தொடர்ந்து அமெரிக்க அரசு விசா ரணையைத் தொடங்கியுள்ளது.

வால்ட் டிஸ்னி நிறுவனம் சமீ பத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர் களுக்கு லே ஆஃப் அளித்தது. இவ்விதம் ஊதியமில்லா விடுப்பில் அனுப்பப்பட்டவர்களுக்குப் பதிலாக ஹெச்1 பி விசாவில் வந்த பணியாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து விசாரணையை அமெரிக்க தொழிலாளர் துறை முடுக்கி விட்டுள்ளது.

SCROLL FOR NEXT