பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் மற்றும் கடனை மறுசீரமைப்பு செய்த வங்கிகளின் பட்டியலில் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
ரிசர்வ் வங்கி தகவல் அடிப் படையில் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா கொடுத்த கடன் தொகையில் 21.5 சதவிதம் பிரச்சினையில் உள்ளது. இவை வாராக்கடனாகவோ அல்லது மறுசீரமைப்பு செய்யப்பட்ட கடனாகவோ இருக்கின்றன.
இதற்கடுத்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (21.30), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (19.40%) பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி (18.74%) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (17.94%) ஆகிய பொதுத்துறை வங்கிகள் அடுத்த இடத்தில் உள்ளன.
இவை மார்ச் 2015 நிலவரப்படி உள்ள தகவல்கள் ஆகும். ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, அலகாபாத் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யூகோ வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகளில் 15 சதவீதத்துக்கு மேல் பிரச்சினை உள்ள கடன்கள் இருக்கின்றன.
பொதுத்துறை வங்கிகளில் உள்ள மொத்த வாராக்கடன் 2,55,180 கோடி ரூபாயாகும். இதில் 30 நிறுவனங்கள் மட்டுமே 93,769 கோடியை செலுத்த வேண்டி இருக்கிறது.