ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்த பிறகு வங்கிகள் வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை தங்களுடைய அடிப்படை வட்டி விகிதத்தை குறைத்திருக்கின்றன.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா அடிப்படை வட்டி விகிதத்தை 0.30% குறைத்து 9.95 சதவீதமாக்கி யுள்ளது. அதேபோல சிண்டிகேட் வங்கி அடிப்படை வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைத்து 10 சதவீதமாக்கி உள்ளது. பேங்க் ஆப் பரோடா (பிஓபி) மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (ஓபிசி) ஆகியவை டெபாசிட்களுக்கு வட்டியினை குறைத்திருக்கின்றன.
பிஓபி ஒரு கோடி ரூபாய்க்கு கீழே டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு (வெவ்வேறு முதலீட்டு காலங்கள்) 0.25 சதவீதம் குறைத்திருக்கிறது. அதேபோல ஒரு கோடி முதல் 10 கோடி ரூபாய் வரையான டெபாசிட்டுக்கு 0.10 சதவீதம் வட்டியை குறைத்திருக்கிறது.
ஓபிசி 0.25 முதல் 0.50 சதவீதம் வரை டெபாசிட்களுக்கு வட்டி யினைக் குறைத்திருக்கிறது. இந்த அனைத்து வட்டி குறைப்புகளும் ஜூன் 8-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.